வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெல் அவிவ்: இஸ்ரேல் வெற்றிகரமாக ‛அயர்ன் பீம்’ எனும் லேசர் ஆயுத அமைப்பை பரிசோதித்துள்ளது. இதனை உலகின் முதல் ஆற்றல் அடிப்படையிலான ஆயுத அமைப்பு என கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர், தாக்க வரும் ராக்கெட்டுகள், ட்ரோன்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்களை 90 சதவீதம் லேசர் கற்றைகள் மூலம் சுட்டு வீழ்த்த முடியும் என்றார்.
இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், லேசர் கற்றையை அனுப்பி ராக்கெட்டுகள், ட்ரோன்களை அழிக்கும் பரிசோதனை முயற்சியை தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளார். ஆள் அரவம் இல்லாத பாலைவன பூமியில் ஒரு கனரக வாகனத்தில் லேசர் ஆயுதம் இருக்கிறது. கேமரா லென்ஸ் போன்று இருக்கும் அவை பக்கவாட்டிலும், மேலும் கீழுமாக சுழலும் தன்மை கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமாக ரபேல் சிஸ்டம்ஸ் இதன் தயாரிப்பில் முக்கிய பங்காற்றியுள்ளது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து உத்தரவு வந்தவுடன் ஏவுகணைகள் சீறிப்பாய்கின்றன. உடனே லேசர் கற்றை உயிர் பெற்று வானிலேயே அவற்றை சுட்டு வீழ்த்துகிறது.
அறிவியல் புனைக்கதை அல்ல..
இது பற்றி இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் கூறியதாவது: இஸ்ரேல் வெற்றிகரமாக புதிய ‛அயர்ன் பீம்’ எனும் ஆயுதங்களை இடைமறித்து அழிக்கும் லேசர் அமைப்பை பரிசோதித்துள்ளது. இது லேசரைப் பயன்படுத்தி நாட்டுக்குள் வரும் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை சுட்டு வீழ்த்தும். ஒரு முறை இதனைப் பயன்படுத்த சுமார் 300 ரூபாய் மட்டுமே செலவாகும். இது அறிவியல் புனைக்கதை போன்று இருக்கலாம். ஆனால் உண்மை. என கூறியுள்ளார்.
Advertisement