ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்நிலையில் 2021ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உருவான வேலைவாய்ப்பு தட்டுப்பாடு பெரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள தரவுகள் இந்தியர்களின் ஆதிக்கத்தைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.
கைவிரித்த இலங்கை அரசு.. 51 பில்லியன் டாலர் கடன் செலுத்த முடியாது.. நிதியமைச்சகம் அறிவிப்பு..!
ஹோம்லேண்ட் செக்யூரிட்டி
அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில், 2021ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்க அரசு அளித்த ஹெச்1பி விசாவில் பெரும் பகுதி இந்தியர்கள் கைப்பற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. சுமார் 20 முதல் 30 சதவீதம் எல்லாம் இல்லை..
ஹெச்1பி விசா விண்ணப்பங்கள்
2021ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 4.07 லட்சம் ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் ஒப்புதல் பெற்றுள்ளது. இது 2020ஆம் ஆண்டின் 4.26 விசா விண்ணப்பத்தை விடவும் குறைவு என்றாலும் தொடர்ந்து 4 லட்சம் அளவீட்டை தாண்டியுள்ளது பெரும் சாதனையாக உள்ளது.
இந்தியர்கள் ஆதிக்கம்
இப்படி 2021ஆம் ஆண்டில் ஒப்புதல் பெற்ற 4.07 லட்சம் விண்ணப்பத்தில் லாட்டரி முறையில் சேர்வு செய்யப்பட்டு அமெரிக்காவின் USCIS ஹெச்1பி விசா அளித்துள்ளது. இதில் 74 சதவீதம் விசாக்களை இந்தியர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். இந்தியா வை தொடர்ந்து சீனர்கள் டுமார் 12.4 சதவீத விசாவை பெற்றுள்ளனர்.
ஐடி ஊழியர்கள்
மேலும் 2021ல் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள 4.07 லட்சம் ஹெச்1பி விசா விண்ணப்பத்தில் 2.80 லட்சம் விண்ணப்பங்கள் ஐடி வேலைவாய்ப்பைச் சார்ந்து உள்ளது, ஒப்புதல் பெற்ற விசாவில் 68.8 சதவீதம் ஐடி ஊழியர்களுக்குத் தான்.
Indians bagged 74 percent H-1B visas in 2021; IT employees higher domination
Indians bagged 74 percent H-1B visas in 2021; IT employees higher domination ஹெச்1பி விசாக்களை மொத்தமாகச் சுருட்டிய இந்தியர்கள்.. ஐடி ஊழியர்கள் தான் டாப்பு..!