3 கிலோ சமோசா சாப்பிட்டால் ரூ.11 ஆயிரம் பரிசுத் தொகை| Dinamalar

காஸியாபாத்: உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு சிற்றுண்டி கடையில், 3 கிலோ சமோசாவை சாப்பிடுவோருக்கு, 11 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், சாஹிபாபாத் பகுதியில் உள்ள ஒரு சிற்றுண்டி கடைக்காரர், தன் கடைக்கு வாடிக்கையாளர்களை வரவழைக்க, போட்டி ஒன்றை நடத்தி வருகிறார். இவர், 3 கிலோ எடையில் சமோசாக்களை தயாரித்து, அதை ஐந்து நிமிடங்களுக்குள் சாப்பிடும் நபருக்கு, 11 ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளார். இந்தப் போட்டியில் பங்கேற்க, கடைக்கு பலரும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த 3 கிலோ சமோசா ஒன்றின் விலை, 500 ரூபாய்.

சமீபத்தில், கவுரவ் கண்ணா என்ற இளைஞர், கடைக்காரரின் சவாலை ஏற்று, 3 கிலோ சமோசாவை, 4:51 நிமிடங்களில், சாப்பிட்டு முடித்தார். இதையடுத்து, கடைக்காரர் அவருக்கு, 11ஆயிரம் ரூபாயை பரிசாக வழங்கினார். இந்நிலையில், 3 கிலோ சமோசாவை தயாரித்து போட்டிக்கு தரும் காட்சிகள் அடங்கிய, ‘வீடியோ’ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.