Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110. 85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று புனித வெள்ளி!
இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நாளாக அனுசரிக்கின்றனர். இன்று புனித வெள்ளியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான கிறிஸ்வர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது!
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில், மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக ஜூன் 15ம் தேதி வரை, 60 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
Tamil Nadu news live update
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம்!
Tamil Nadu | The annual chariot festival to begin with glory as a huge crowd gathers outside Meenakshi Amman Temple in Madurai
Visuals from Masi Street pic.twitter.com/hRCwTOLa5D
— ANI (@ANI) April 15, 2022
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு மீனாட்சி – சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனும் எழுந்தருளினர். அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதையொட்டி, மதுரை மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம் குவிந்தது.
நீட் விலக்கு மசோதா.. ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாதது வேதனை அளிக்கிறது. சட்டப்பேரவையில் இருமுறை மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டும், நேரில் வற்புறுத்தியும் ஆளுநர் அனுப்பவில்லை. நீட் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது குறித்த உறுதியான பதில் பெறப்படாத நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது முறையாக இருக்காது என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா!
ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலைக்கு காரணம் என புகார் கூறப்பட்ட நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட அசௌகரியமான சூழ்நிலை காரணமாக நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்; நான் எந்த தவறும் செய்யவில்லை, நான் களங்க மற்றவன் என்பதை விரைவில் நிரூபிப்பேன்”என்று ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.
சீனாவில் கொரோனா புதிய உச்சம்!
சீனாவில் ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அடுத்த இரு வாரங்களுக்கு மேல் அங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
“ “
திருவள்ளூர், திருமுல்லைவாயில் குடியிருப்பு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகையை முதல்வர் வழங்கினார்.
டெல்லியில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. திங்களன்று 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 325 ஆக உயர்ந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு, டான்பாஸ் பிரச்சனை தொடங்கியது முதல், இப்போது வரை உக்ரைனில் சுமார் 15 ஆயிரம் பேரை ரஷ்ய படைகள் படுகொலை செய்துள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் நியூ மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கருகின. பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 4,500 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஆவடியில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நரிக்குறவர் இன மக்களை சந்தித்து, அவர்களுடன் தேநீர் அருந்தி கலந்துரையாட உள்ளார். மேலும் 63 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
விண்ணப்பிக்கும் அனைவருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும். சென்னையில் இருந்து நேரடியாக ஹஜ் பயணம் செய்ய விமான சேவை இந்த வாரத்தில் தொடங்கும் என ஹஜ் கமிட்டி தலைவர் அபு பக்கர் கூறியுள்ளார்.