சென்னை: அகில இந்திய கோட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 24 இடங்களை தரக்கோரி கடிதம் அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய கோட்டாவில் 24 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளது. மாநில கோட்டாவில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 4 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 14 இடங்களும் காலியாக உள்ளநிலையில், மாநில கோட்டாவுக்கு தரவும் கலந்தாய்வு நடத்தவும் அனுமதி கோரி ஒன்றிய சுகாதாரத்துறைக்கு ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதினார்.