சென்னை: அடுத்துவரும் பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பை பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தங்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை மேற்கொண்டார். முதற்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் 500 பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.