சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷிவம் டுபே தனது ரோல் மொடல் யுவராஜ் சிங் என தெரிவித்துள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் CSK வெற்றி பெற்று, 2022 ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
216 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயிக்க CSK அணிக்கு உதவியது ராபின் உத்தப்பாவும், ஷிவம் டுபேவும் தான். உத்தப்பா 88 (50) ஓட்டங்கள் விளாச, ஷிவம் டுபே 46 பந்துகளில் 8 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 95 ஓட்டங்கள் என ருத்ர தாண்டவம் ஆடியிருந்தார்.
இதன்மூலம் ஷிவம் டுபேவுக்கு ரசிகர்கள், வீரர்கள் என அனைத்து தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் தான் தனது ரோல் மொடல் என ஷிவம் டுபே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘யுவி பா தான் இடக்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு ரோல் மொடல். நான் அவரை போல விளையாடுகிறேன் என்று நிறைய பேர் என்னிடம் கூறியிருக்கிறார்கள்’ என தெரிவித்தார்.