பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றதையடுத்து, அவரது அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராக
பாகிஸ்தான்
முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்,
ஆப்கானிஸ்தான்
பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கிழக்கு கோஸ்ட் மற்றும் கிழக்கு குனார் பகுதிகள் மீது பாகிஸ்தான் படைகள் நேற்றிரவு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி. இத்தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஆப்கானிஸ்தானிய
தலிபான்கள்
மற்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இல்லை. அதேசமயம், பாகிஸ்தானிய தலிபான்கள் இத்தாக்குதலுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்துள்ளன.
கெஞ்சும் புடின் நண்பர் மனைவி: யார் இந்த விக்டர் மெட்வெட்சுக்?
முன்னதாக, தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படுவதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கின. அதனைத்தொடர்ந்து, ஆப்கனை கைபற்றியுள்ள தலிபான்கள், அங்கு புதிய அரசை அமைத்துள்ளனர்.