இடைத்தேர்தல் முடிவுகள்; திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி, காங்கிரஸ் வெற்றி

By polls results 2022 TMC, RJD, Congress secure seats: பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பீகாரில் ஆர்ஜேடி-யும், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்காளத்தின் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பீகாரின் போச்சாஹான் மற்றும் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல், மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

இதில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பீகாரில் ஆர்ஜேடி-யும், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1998 இல் கட்சி உருவாக்கப்பட்டதிலிருந்து முதன்முறையாக அசன்சோல் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது மற்றும் பாலிகங்கே சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் மேற்கு வங்க இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. அசன்சோல் தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சரும், டிஎம்சி வேட்பாளருமான சத்ருகன் சின்ஹா ​​30,3209 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளராக மாறிய பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பாலை தோற்கடித்தார். பாலிகங்கே தொகுதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த CPI(M)-ன் சைரா ஷா ஹலீமை விட 20,228 வாக்குகள் அதிகம் பெற்று பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார்.

பீகாரில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) போச்சாஹான் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் இந்த ஒரு தொகுதியில் தான் இடைத்தேர்தல் நடந்தது. ஆர்ஜேடி வேட்பாளர் அமர் குமார் பாஸ்வான் 48.52 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார், பாஜக வேட்பாளர் பேபி குமாரி 2வது இடத்தில் உள்ளார்.

இதையும் படியுங்கள்: காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்கும் சோனியா, ராகுல்… பிரசாந்த் கிஷோர் ரீ என்டரி?

மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் வடக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ஸ்ரீ ஜாதவ் 54.25 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ஸ்ரீ ஜாதவ் 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஒருங்கிணைக்கப்பட்ட மகா விகாஸ் அகாடி (MVA) BJP க்கு படுதோல்வியை அளித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் காங்கிரஸ் எம்எல்ஏ சந்திரகாந்த் மரணமடைந்ததன் காரணமாக நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜாதவின் மனைவி ஜெய்ஸ்ரீ ஜாதவ் வெற்றி பெற்றுள்ளார்.

சத்தீஸ்கரில் உள்ள கைராகர் சட்டமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் யாசோதா வர்மா வெற்றி பெற்றுள்ளார்.

நக்சல் பாதிப்புக்குள்ளான ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள கைராகருக்கு இடைத்தேர்தல்,  கைராகரில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த ஜேசிசி(ஜே) எம்எல்ஏ தேவ்வ்ரத் சிங் மரணமடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்றது. ஜேசிசி (ஜே) சிங்கின் அனுதாபத்தால் வாக்குகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் அவரது மைத்துனருக்கு இடைத்தேர்தலுக்கு டிக்கெட் கொடுத்தது. காங்கிரஸ் வேட்பாளர் யசோதா வர்மா மற்றும் பாஜகவின் கோமல் ஜாங்கேல் ஆகியோர் இப்பகுதியில் எண்ணிக்கையில் வலுவாக உள்ள ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 2018 சட்டமன்றத் தேர்தலில், ஜங்கேல் 850 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.