இந்தியாவில் கொரோனா தொற்றின் 3ஆவது அலை, அதன் வீழ்ச்சிப்பாதையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை ;கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. . தினந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 1,007, நேற்று 949 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 975 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 975 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4கோடியே ,30 இலட்சத்து 40 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது. .
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5இலட்சத்து ,21ஆயிரத்து ,747 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 796 பேர் மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4கோடியே,25 இலட்சத்து ,7 ஆயிரத்து ,834 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 11ஆயிரத்து ,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 186.38 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.