வாஷிங்டன்: இந்தியாவை தாக்கினால் யாரும் தப்பிக்க முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சான்பிரான்சிஸ்கோ நகரில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது. உலகின் 3 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் உருவெடுக்கும்.
லடாக் எல்லையில் இந்திய வீரர்களின் தைரியத்தை உலக நாடுகள் பாராட்டின. இந்திய வீரர்கள் என்ன செய்தனர் என்பது பற்றியும், இரு நாட்டு அரசுகள் என்ன முடிவு எடுத்துள்ளன என்பது பற்றி வெளிப்படையாக கூற முடியாது. ஆனால், இந்தியாவை தாக்கினால், யாரையும் விட மாட்டோம் என்ற செய்தி மட்டும் சென்றுள்ளது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
வாஷிங்டன்: இந்தியாவை தாக்கினால் யாரும் தப்பிக்க முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.அமெரிக்கா சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.