இந்திய ரயில்வே வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளி… நடந்தது என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் தாதர் ரயில் நிலையத்தில் இருந்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் புதுச்சேரிக்கு தாதர் –
புதுச்சேரி எக்ஸ்பிரஸ்
ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வாரத்தில் இரண்டு நாள்களும் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

அந்த வகையில், ஏப்ரல் 15-ம் தேதி இரவு வழக்கம் போல் ரயில் தாதரில் இருந்து புறப்பட்டுது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அடுத்த ரயில் நிலையமான மதுங்க ரயில் நிலையம் அருகே சென்றபோது வேறு ஒரு ரயிலின் பெட்டிகள் உரசியதில் புதுச்சேரி சென்ற பயணிகள் ரயிலில் 3 பெட்டிகள் தரம் புரண்டது.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

மீட்பு பணிகள் நிறைவடைந்த பிறகு இன்று பிற்பகல் 1 மணி முதல் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. விபத்து காரணமாக ஏப்ரல் 17-ம் தேதி புதுச்சேரியில் இருந்து தாதர் செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாக
தெற்கு ரயில்வே
அறிவித்துள்ளது.

இந்தியாவில், 1983-ம் ஆண்டு முதன் முதலாக மும்பை – தானே இடையே ரயில் சேவை தொடங்கப்பட்ட ஏப்ரல் 16-ம் தேதி நிகழ்ந்த இந்த விபத்து இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பதிவாகிவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.