ஐபிஎல்லில் தொடர்ந்து சொதப்பி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் இஷான் கிஷனால் ரசிகர்கள் வெறுப்படைந்துள்ளனர்.
2022 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் 15.25 கோடி என மிக அதிக தொகைக்கு வாங்கப்பட்டார். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் தவறி வருகிறார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 200 ஓட்டங்கள் இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. ரோகித் சர்மா 6 ஓட்டங்களில் வெளியேற, ப்ரேவிஸ் 31 (13) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
ஆனால் 17 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷன் 13 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
— Diving Slip (@SlipDiving) April 16, 2022
அவர் வெளியேறும் போது பவுண்டரி எல்லையை தனது பேட்டால் அடித்து விரக்தியை வெளிப்படுத்தினார்.
மும்பை அணி நடப்பு தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாத நிலையில், 15 கோடிக்கு வாங்கப்பட்ட இஷான் கிஷன் தொடர்ந்து சொதப்புவது ரசிகர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சமூக வலைதளத்தில் இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.
Who said he is not hitting boundaries.. 😂😂😂#IshanKishan #fraud#LSGvMI pic.twitter.com/9pwjCMO2Yw
— Brijesh Baghel (@cricbrij) April 16, 2022
Team #MI paid ₹15Cr to buy player #IshanKishan who scored 13 runs. Fair enough! #MIvsLSG
— KRK (@kamaalrkhan) April 16, 2022