உக்ரேனிய பெண்களை சீரழிக்க வேண்டும் என இராணுவ வீரரான தமது கணவருக்கு தொலைபேசியில் அனுமதியளித்த ரஷ்ய பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் உக்ரேனிய உளவாளிகளால் வெளியிடப்பட்ட ஒடியோ பதிவில், பெண் ஒருவர் தமது கணவரான ரஷ்ய வீரருக்கு உக்ரேனிய பெண்களை சீரழிக்க அனுமதி வழங்குவது வெளிச்சத்துக்கு வந்தது.
குறித்த சம்பவம், சமூக ஊடகங்களில் வெளியாகி, உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
30 நொடிகள் கொண்ட அந்த ஓடியோ தொடர்பில் மேலதிக பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது உக்ரேனிய அதிகாரிகள் தரப்பு.
ரஷ்ய துருப்புகளின் தார்மீக பண்புகள் மட்டுமல்ல, அவர்களின் உறவினர்களும் பண்பாடற்றவர்களகவே உள்ளனர் எனவும், அவர்களில் 80% பேர் தற்போது உக்ரைனில் போரை ஆதரிக்கின்றனர் என்றும் அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.
இந்த நிலையில், தொடர்புடைய ரஷ்ய வீரர் மற்றும் அவரது மனைவியை அடையாளம் கண்டுள்ளனர். Roman Bykovsky மற்றும் அவரது மனைவி Olga Bykovskaya ஆகிய இருவருமே தொலைபேசியில் அவ்வாறு பேசியதாக தற்போது அம்பலமாகியுள்ளது.
மேலும், விசாரணை அதிகாரிகள் தரப்பு குறித்த தம்பதியின் புகைப்படங்களையும், அவர்கள் தொடர்பான தகவல்களையும் திரட்டியுள்ளனர்.
இருவரும் தங்களது 4 வயது மகனுடன், 2018ல் இருந்தே Orel பகுதியில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இருவரையும் பல முறை தொடர்பு கொண்டும், பதிலளிக்க மறுத்துள்ளதாகவும், அந்த ஓடியோ பதிவில் தாங்கள் இல்லை என மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, தங்களது சமூக ஊடக பக்கங்களையும் இருவரும் முடக்கி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், சிறு குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் உட்பட புடினின் படைகள் நூற்றுக்கணக்கான வன்கொடுமைகளை உக்ரைனில் மேற்கொண்டுள்ளவதாக குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.