ஐபிஎல் : ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிதிஷ் ராணா அரைசதம்

மும்பை,
இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக களமிறங்கிய  ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் ,வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார் .
பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் ,நிதிஷ் ராணா  நிலைத்து நின்று ஆடினர். அணியின் ஸ்கோர் 70 ஆக இருந்தபோது ஷ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களில் . ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார் .
மறுபுறம் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா 32 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.