ஏப்ரல் 2022, ஸ்மார்ட்போன்களின் கொண்டாட்ட மாதமாகப் பார்க்கப்படுகிறது. இன்று வரை பல பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனைக்கும் வந்துவிட்டது. ஆனால், இன்னும் சில போன்கள் வெளியாக காத்திப்பது உங்களுக்குத் தெரியுமா.
ஆம், புதிய போன்கள், கேட்ஜெட்டுகள் இந்த மாதத்தில் அறிமுகம் ஆக உள்ளது.
ஒன்பிளஸ் ஏப்ரல் 28 அன்று ஒரு நிகழ்வை நடத்துகிறது. நிறுவனம் இரண்டு புதிய மொபைல்கள், வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, Xiaomi அதன் ஃபிளாக்ஷிப் Xiaomi 12 ப்ரோ போனை அறிமுகப்படுத்துகிறது. அதன் இணை நிறுவனமான
Redmi 10A
ஏப்ரல் 20 அன்று வெளியிடப்படலாம். எனவே, நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், கொஞம் அமைதி காப்பது நல்லது. இப்போது வெளியாகக் காத்திருக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.
வெறும் ரெண்டு லைட் – அதுக்காக விலைய இப்படி ஏத்துறதா!
Realme Narzo 50A Prime
Realme இந்தியாவில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் சமீபத்தில் Realme GT 2 Pro, Realme 9 SE, ஸ்மார்ட் கேட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்தியது. இப்போது ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த போன் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பட்ஜெட் போனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே இந்தோனேசியாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. போன் அம்சங்களைப் பொருத்தவரை, 6.6″ இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2MP மெகாபிக்சல் மேக்ரோ, 2MP மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் ஆகியவை கொண்ட மூன்று பின்பக்க கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
OnePlus 10R
OnePlus 10R நடக்கவிருக்கும் ஒன்பிளஸ் நிகழ்வில் அறிவிக்கப்படலாம் என்று இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிக்கைகளின்படி, ஒன்பிளஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அலுவலர் நவ்நீத், பிராண்ட் விரைவில் புதிய ஒன்பிளஸ் ஆர் சீரிஸ் போனை அறிமுகப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். OnePlus 10R இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், OnePlus 10R இன் அம்சங்கள், வடிவமைப்பு குறித்து ஏற்கனவே இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, ஒன்பிளஸ் 10ஆர் ஆனது MediaTek 8100 புராசஸர், 6.7″ இன்ச் FHD+ E4 AMOLED டிஸ்ப்ளே, 50MP மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டிக்கரை மாற்றி ஒப்போ போனை விற்பனைக்குக் கொண்டு வருகிறதா ஒன்பிளஸ்!
Redmi 10A
இந்தியாவில் Redmi 10A அறிமுகம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், இந்த போன் ஏப்ரல் 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட Redmi 9A ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பாகும். ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்டுவிட்டது.
Redmi 10A போன், பழைய 9A மொபைலை விட சிறிய மேம்படுத்தல்களுடன் வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது. Redmi 10A இன் சீன மாடல், அதே MediaTek ஹீலியோ G25 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இதில் 5000mAh பேட்டரி, 6.53 இன்ச் HD+ டிஸ்ப்ளே, பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் ஒற்றை கேமரா உள்ளது. செல்பி எடுக்க 5 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
OnePlus Nord CE2 Lite
ஒன்பிளஸ் நார்ட் சிஇ 2 லைட் இந்தியாவில் வெளியிடப்படுமா, இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இல்லை. புதிய OnePlus நிகழ்வு ஏப்ரல் 28 அன்று நடைபெறும் என்று நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது. இந்நாளில், நிறுவனம் Nord CE 2 Lite ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்றும், இதன் விலை சுமார் 20,000 ரூபாயாக இருக்கும் எனவும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இந்தியாவில் வெளியான OnePlus Nord CE 2 5ஜி போனின் டோன் டவுன் மாடலாக இது இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Xiaomi 12 Pro
இந்தியாவில் மிகப்பெரும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள சீனாவின் சியோமி நிறுவனம், தனது புதிய பிளாக்ஷிப்
சியோமி 12 ப்ரோ
ஸ்மார்ட்போனை ஏப்ரல் 27, 2022 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த போன் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது.
இப்போது இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. Xiaomi 12 Pro ஆனது Qualcomm இன் சிறந்த ஸ்னாப்டிராகன் 8 Gen 1 புராசஸரால் இயக்கப்படுகிறது. சியோமி 12 ப்ரோவின் விலை சுமார் ரூ.65,000 எனக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட சியோமி சற்று குறைந்த விலையை பரிசீலித்து வருகிறது.
லிங்கை க்ளிக் செய்து சர்வேயில் கலந்துக்கோங்க… கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்க!