நாடாளுமன்றத்தின் பேருந்தில் “நாடாளுமன்றம்” என பதிவிடப்பட்டுள்ள செங்கோலுடனான பாரிய ஸ்டிக்கர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் நிலைமையின் கீழ் அந்த பேருந்துகளில் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருதி குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் மற்றும் நாடாளுனமன்ற ஊழியர்கள் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறிய ஸ்டிக்கர்கள் பாதுகாப்புக்காக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் என பதிவிடப்பட்டுள்ள வாகனங்களுக்கு பல தரப்பினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு நாடாளுமன்ற பிரதானிகளினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் நுவரெலியாவுக்குச் சென்ற நாடாளுமன்ற பேரூந்து ஒன்று திரும்பி வரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சத்தில் அந்த பேருந்தின் சாரதி இது தொடர்பில் பொலிஸாரிடம் வினவியதாக தெரியவந்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் சமீப நாட்களாக நாடாளுமன்ற வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.