குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர அனுமன் சிலையைக் காணொலியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
நாட்டின் நான்கு பகுதிகளில் மிகப்பெரிய அனுமன் சிலைகள் வைக்கத் திட்டமிட்டு ஏற்கெனவே இமாச்சலத்தின் சிம்லாவில் திறக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாகக் குஜராத்தின் மோர்பியில் நிறுவப்பட்டுள்ள 108 அடி உயர அனுமன் சிலையை, அனுமன் பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மூன்றாவது அனுமன் சிலை ராமேஸ்வரத்திலும், நான்காவது அனுமன் சிலை மேற்கு வங்கத்திலும் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
அனுமனுக்கு நான்கு சிலைகள் அமைப்பது வெறும் தீர்மானம் மட்டுமல்ல என்றும், ஒரே நாடு, சிறந்த நாடு என்பதற்கான தீர்மானத்தின் ஒருபகுதியாகும் எனத் தெரிவித்தார்.