புதுடெல்லி: குஜராத்தின் மோர்பி பகுதியில் 108 அடி உயரமுள்ள ஹனுமன் சிலையை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ராமேஸ்வரத்திலும், மேற்குவங்கத்திலும் ஹனுமன் சிலை நிறுவப்படும் என்று கூறினார்.
ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி குஜராத் மாநிலம் மோர்பி நகரில் நிறுவப்பட்டுள்ள 108 அடி சிலையை பிரதமர் மோடி இன்று (ஏப்.16) காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.
“ஹனுமன் ஜி சார் தம் திட்டத்தின் கீழ் நாட்டின் 4 திசைகளிலும் ஹனுமன் சிலை நிறுவப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஷிம்லாவில் ஒரு சிலை நிறுவப்பட்டுவிட்டது. இரண்டாவது சிலை தற்போது குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு சிலைகள் ராமேஸ்வரத்திலும், மேற்குவங்கத்திலும் நிறுவப்படும். இது வெறும் சிலை நிறுவும் முயற்சி அல்ல. இது நமது கொள்கையான ஒரே பாரதம்; வளமான பாரதம் என்ற கொள்கையை நிலைநிறுத்தும் முயற்சி” என்று சிலையை திறந்து வைத்துப் பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், ஹனுமன் வலிமை, துணிவு மற்றும் கட்டுப்பாட்டின் அடையாளமாகத் திகழ்வதாகக் கூறியிருந்தார்.
Source link