மாண்டியா : ”ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு தன் குடும்பத்தினரை தவிர, வேறு யாரும் கண்ணுக்கு தெரியாது. தலித் சமுதாயத்தவரை முதல்வராக்குவோம் என்பது வெறும் நாடகம்,” என உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.மாண்டியாவில் அவர், நேற்று கூறியதாவது:குமாரசாமி நாடகமாடி, கண்ணீர் விட்டு மக்களை ஏமாற்றுவார். தற்போது நடத்தும் ஜலதாரே யாத்திரையும் நாடகம் தான்.தான் பாழாவது மட்டுமின்றி, தன்னை நம்பியவர்களையும் பாழாக்குவார். எத்தனையோ தலைவர்கள், குமாரசாமியை அரசியல் ரீதியில் வளர்த்தனர்.
ஆனால் இவர் அந்த தலைவர்களுக்கே, துரோகம் செய்தார்.குமாரசாமிக்கு அரசியல் செய்வதை தவிர, வேறெதுவும் தெரியாது. ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைப்பதை விட, பாவச்செயல் வேறொன்றில்லை. இக்கட்சியுடன் பா.ஜ., எப்போதும் சகவாசம் வைத்துக்கொள்ளாது.ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு, தன் குடும்பத்தினரை தவிர, வேறு யாரும் கண்ணுக்கு தெரியாது. தலித் சமுதாயத்தவரை முதல்வராக்குவோம் என்பது, வெறும் நாடகம்.மக்கள் ம.ஜ.த.,வை நிராகரித்துள்ளனர்; இனியும் நிராகரிப்பர். 2023 மட்டுமல்ல, 2028ம் ஆண்டிலும் நாங்களே ஆட்சிக்கு வருவோம். எம்.பி., சுமலதா அம்பரிஷுக்கு, பா.ஜ.,வில் இணைய விருப்பம் உள்ளது. அவர் சேர்ந்தால் வரவேற்போம். சமுதாயத்தில் ஊழல், பிரிவினைக்கு காங்கிரசாரே மூல காரணம். அவர்களின் உடல், மனம் என அனைத்திலும், ஊழல் நிரம்பியுள்ளது. ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியை, ராஜினாமா செய்தது, காங்கிரசுக்கு கிடைத்த வெற்றியல்ல.காங்கிரஸ் இல்லாத சமுதாயம் உருவானால், மக்களுக்கு வெற்றி கிடைக்கும். 40 சதவீத கமிஷன் அரசு என, காங்கிரசார் குற்றம்சாட்டுகின்றனர். இந்த கலாசாரத்தை வளர்த்ததே, காங்கிரஸ் தலைவர்கள் தான்.இவ்வாறு அவர் கூறினார்
Advertisement