கே.ஜி.எஃப்-2 படத்தின் முதல் நாள் வசூலை பார்த்து வாய் பிளக்கும் திரையுலகம்.!!

கன்னட ரசிகர்கள் மற்றுமின்றி சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த படம் கே ஜி எஃப். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதையடுத்து. கே ஜி எஃப்இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

கொரோனா பெரும் தொற்று காரணமாக கே ஜி எஃப் 2-ஆம் பாகத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. கடந்த மாதம் கே ஜி எஃப் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  இதனிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த  14ஆம் தேதி கே ஜி எஃப்  இரண்டாம் பாகம் வெளியானது. 

இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யாஷ் அதீரா, சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் ஜி எஃப் 2-ஆம் பாகம் வெளியானது. 

இந்நிலையில், ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் முதல் நாள் வசூலைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி முதல் நாள் இந்தியா முழுவதும் 134.5 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.