இந்தியாவில் இருந்து பத்து இலட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்வதற்கு எகிப்து ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாடுகளிடம் இருந்து எகிப்து நாடு அதிக அளவில் கோதுமை இறக்குமதி செய்து வந்தது.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது, அதையடுத்த பொருளாதாரத் தடைகள் காரணமாக இருநாடுகளிடம் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய முடியவில்லை.
இந்நிலையில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் கோதுமை வயல்களை எகிப்து அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றபின் கோதுமைக் கொள்முதலுக்கான நாடாக இந்தியாவை அங்கீகரித்துள்ளனர்.
பத்து இலட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்ய எகிப்து முடிவு செய்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் டன் கோதுமையை எகிப்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளது.