பெங்களூரு : எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பக்கத்தில் அமர்ந்துள்ள அந்த பெரிய தலைவர், சித்தராமையாவுக்கு குழி பறிக்கக்கூடும். முதுகில் குத்துவதற்கு முன் சித்தராமையா சுதாரிக்க வேண்டும்’ என முதல்வரின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா எச்சரித்தார்.இது தொடர்பாக, அவர் நேற்று கூறியதாவது:அதிகாரத்துக்காக முட்டி மோதும் சிவகுமார், எங்கோ அமர்ந்தபடி, வேறொரு இடத்தில் குண்டு வைக்கும் கலையை கற்று தேர்ந்துள்ளார்.
எதிர் வரும் நாட்களில் அது, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், காங்., முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் கழுத்தையே நெரிக்கும். அதற்கு முன் அவர் விழித்துக் கொள்ள வேண்டும்.வரும் 2023 சட்டசபை தேர்தலில், சிவகுமாருக்கு சித்தராமையாவே கடுமையான போட்டியாளராக இருக்கக்கூடும். எனவே சித்தராமையாவுக்கு தெரியாமல் குழி பறிக்க புதிய நாடகத்தை உருவாக்கலாம். அதிகாரத்துக்காக சிவகுமார் எதையும் செய்வர்.நாற்காலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் பழக்கம் உள்ளவர் சிவகுமார் என்பதை, நாடே அறியும்.டி.எஸ்.பி., கணபதி தற்கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக இருந்த, அன்றைய உள்துறை அமைச்சர் ஜார்ஜை கைது செய்து, விசாரணை நடத்த காங்கிரஸ் அரசு உத்தரவிட்டு, அனுமதியளிக்கவில்லை.அதுபோலத் தான், இப்போது ஈஸ்வரப்பா விவகாரத்திலும் பின்பற்றப்படுகிறது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Advertisement