சீன மொழியை கற்கும் இந்திய ராணுவ வீரர்கள்| Dinamalar

லே: சீன ராணுவத்தினரின் உத்திகளை அறிந்துகொள்ள, நம் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு, சீன மொழியான, ‘மாண்டரினை’ பயிற்றுவிக்க, இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.

எல்லைப் பிரச்னை காரணமாக, நம் அண்டை நாடான சீனாவுடன், 2020ம் ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே, தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.இதன் விளைவாக, லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவ வீரர்கள் திரும்பப்பெறப்பட்டனர்.

எனினும், இதர பகுதிகளில் இருந்து வீரர்கள் வாபஸ் பெறப்படவில்லை.இந்நிலையில், சீன வீரர்களின் உத்திகளையும் செயல்பாடுகளையும் அறிந்துகொள்ள, நம் ராணுவ வீரர்களுக்கு, மாண்டரின் மொழியை பயிற்றுவிக்க உள்ளதாக, இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், தகவல் மிகப்பெரிய ஆயுதமாக பார்க்கப்படுகிறது. எனவே, இதில் இந்திய ராணுவம் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.