சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பார்வை மாற்றுத்திறனாளிகளை தாக்கிய காவலர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். வழிகேட்ட மாற்றுத்திறனாளிகள் தினேஷ், விஜயகாந்தை மதுபோதையில் இருந்த காவலர் தினேஷ்குமார் தாக்கினார். இருவரையும் தாக்குவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தினேஷ்குமாரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.