சேலத்தில் உள்ள திருமணிமுத்தாற்றில் மழையை பயன்படுத்தி சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் திறந்துவிடப்பட்டதால், ஆற்றில் நுரை பொங்குவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனை சாதகமாக பயன்படுத்தி சில சாயப்பட்டறைகள், சாயக்கழிவுகளை ஆற்றில் திறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், திருமணிமுத்தாற்றில் ஆங்காங்கே நுரை பொங்கி வழிகிறது.