கொரோனா மூன்றாவது அலை முடிந்து நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் கிட்டதட்ட முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆனால் சமீப நாள்களாக டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்தியளவில் பதிவாகும் பாதிப்பில் சுமார் 3இல் ஒரு பங்கு தொற்று பாதிப்பு டெல்லியில் பதிவாகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகம் பதிவாகி வருகிறது. ஒரே வாரத்தில் சுமார் 44 குழந்தைகள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் எக்ஸ்இ மற்றும்
பிஏ.2
வகை தொற்று அதிகளவில் பரவுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஜூன் மாதம் நான்காவது அலை பாதிப்பு ஏற்படும் என ஐஐடி ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் வேலூர் சிஎம்சி கல்லூரி பேராசிரியரும் நாட்டின் முன்னணி மைக்ரோ பயாலஜிஸ்டுமான மருத்துவர் ககன்தீப் கங்க் நான்காவது அலை குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் நான்காவது அலை ஏற்படும் என்ற கூற்று தற்போதைய சூழலில் மிகையான ஒன்று. அதேவேளை, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள்,
தடுப்பூசி
செலுத்தியவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். உருமாறிய வைரஸ் பரவல் என்பது இயல்பான ஒன்று தான். வெளிநாடுகளுக்கு மக்கள் சென்று வரும் சூழலில் இதை தவிர்க்க முடியாது.
அதேவேளை,
எக்ஸ் இ வகை
கொரோனாவைக் கண்டு அச்சப்பட வேண்டியது இல்லை.
பிஏ.1
, பிஏ.2 போன்ற திரிபுகளை போல எக்ஸ் இ வகை தொற்று தீவரத்தன்மை கொண்டது அல்ல. அனைத்து பாதிப்புக்களும் எக்ஸ் இ வகை எனவும் அச்சம் கொள்ள தேவையில்லை” என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் சமீபகாலமாக தொற்று அதிகளவில் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு சீனாவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. தென்கொரியாவில் தினமும் 1.5 லட்சத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவல் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 186.28 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 99 கோடியே 74 லட்சம் பேர் ஒரு தவணை தடுப்பூசியும், 84 லட்சத்து 18 ஆயிரம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற தகவலும், உலக நாடுகளில் குறுகிய காலத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. எனவே ஜூன் மாதம் நான்காவது அலை ஏற்படும் என்ற ஐஐடி ஆய்வு தகவல் எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது.