அரசு பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்க திட்டமிட்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் அடுத்து வரும் நிறுத்தம் குறித்து அறிவிப்பை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், இந்தத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் முதற்கட்டமாக 500 மாநகரப் பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதற்கு முன் பேருந்துகளில் கேமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்து வரும் பஸ்நிறுத்தம் குறித்து அறிவிக்க ஒலிபெருக்கிகள் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.