தமிழ்நாட்டுக்கு அடுத்த ஜாக்பாட்.. ஜோஸ்ட் இந்தியா புதிய தொழிற்சாலை..!

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைத் துவங்கியும் விரிவாக்கம் செய்தும் வரும் நிலையில் சென்னையில் வணிக வாகனங்கள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் உலகளாவிய நிறுவனமான ஜோஸ்ட் இந்தியா புதிய உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது.

சென்னை தமிழ்நாட்டின் முக்கிய உற்பத்தி தளமாக இருக்கும் நிலையில் ஜோஸ்ட் இந்தியா பிரம்மாண்ட உற்பத்தி தளத்தை உருவாக்க உள்ளது.

ஹோம் லோன்: எஸ்பிஐ வங்கியின் புதிய வட்டி விகிதம் இதுதான்..!

ஜோஸ்ட் இந்தியா

ஜோஸ்ட் இந்தியா

கிரீன்பேஸ் இண்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் பார்க் நிறுவனம் சென்னையில் உள்ள அதன் டவுன்ஷிப்பில் ஜோஸ்ட் இந்தியா நிறுவனத்திற்குச் சுமார் 2 லட்சம் சதுரஅடி தொழில்துறை இடத்தைக் குத்தகைக்கு வழங்கியுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

உற்பத்தி நிறுவனம்

உற்பத்தி நிறுவனம்

உலகளாவிய நிறுவனமான ஜோஸ்ட் இந்தியா வணிக வாகனங்கள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கான உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் தற்போது இந்த 2 லட்சம் சதுரஅடி தொழில்துறை இடத்தில் பிரம்மாண்ட உற்பத்தி மற்றும் வர்த்தகத் தளத்தை அமைக்க உள்ளது.

 கிரீன்பேஸ்
 

கிரீன்பேஸ்

கிரீன்பேஸ் இண்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் பார்க் என்பது நிரஞ்சன் ஹிரானந்தானி குழுமம் மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகியவற்றின் கூட்டணி நிறுவனமாகும். கிரீன்பேஸ் தற்போது ஜோஸ்ட் இந்தியா உடனான வர்த்தகம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

10 வருட ஒப்பந்தம்

10 வருட ஒப்பந்தம்

கிரீன்பேஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் ஜோஸ்ட் இந்தியா நிறுவனம் உற்பத்தி தளத்தை அமைப்பதற்காக 2 லட்சம் சதுர அடி நிலம் குத்தகை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்தக் குத்தகை ஒப்பந்தம் 10 வருட காலத்திற்குக் கையெழுத்திடப்பட்டுள்ளது.

200 பேருக்கு வேலைவாய்ப்பு

200 பேருக்கு வேலைவாய்ப்பு

ஜோஸ்ட் இந்தியா இப்புதிய தொழிற்துறை கட்டமைப்பை 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்துச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது, இதன் மூலம் கிட்டத்தட்ட 200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ரூ.3,000 கோடி முதலீடு

ரூ.3,000 கோடி முதலீடு

பிளாக்ஸ்டோன் – ஹிரானந்தானி குழுமம் கூட்டணி நிறுவனம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களை மேம்படுத்த ரூ.3,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ளது.

500 ஏக்கர் நிலம்

500 ஏக்கர் நிலம்

இந்தியாவில் நான்கு இடங்களில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதில் தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள் மேம்பாட்டிற்காக 15 மில்லியன் சதுர அடி நிலத்தைக் கொண்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Jost India new manufacturing facility in chennai; Greenbase leased out 2lakh sqft

Jost India new manufacturing facility in chennai; Greenbase leased out 2lakh sqft தமிழ்நாட்டுக்கு அடுத்த ஜாக்பாட்.. ஜோஸ்ட் இந்தியா புதிய உற்பத்தி தளம்..!

Story first published: Saturday, April 16, 2022, 20:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.