புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அளித்த தேநீர் விருந்தை, திமுக, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தன.
தமிழ்ப் புத்தாண்டையொட்டித் துணைநிலை ஆளுநர் மாளிகையில் மாலை 6 மணிக்குத் தேநீர் விருந்து நடைபெற்றது.
அதைப் புறக்கணித்ததாகத் தெரிவித்த புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
தேநீர் விருந்தைத் திமுகவும் புறக்கணித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான சிவா தெரிவித்தார்.