திருவள்ளூர் அருகே பாண்டூரில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில், தரமற்ற டீசல் நிரப்பியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆந்திர வாடிக்கையாளர்களை, பங்க் உரிமையாளரான அதிமுக முன்னாள் எம்.பி., கோ.அரி மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த சின்னபாபு ரெட்டி என்பவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த பங்க்கில் டீசல் நிரப்பி உள்ளார்.
சிறிது தூரம் சென்றவுடன் காரின் என்ஜின் பகுதியில் புகை வந்ததோடு மண்ணெண்ணெய் வாசனை வந்ததால், மீண்டும் பங்கிற்கு வந்து தரமற்ற டீசல் நிரப்பியதாகக் கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போலீசிலும் புகாரளித்துவிட்டு, இரவு முழுவதும் பங்கிலேயே காத்திருந்துள்ளனர். தகவலறிந்து காலையில் பங்கிற்கு வந்த கோ.அரியுடன், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
அப்போது கோ.அரி அவர்களை மிரட்டும் தொனியில் தரக்குறைவாக பேசியதோடு, படம்பிடித்த செய்தியாளர்களையும் மிரட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன.