மும்பை:
ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத் டக் அவுட்டானார். கேப்டன் டு பிளசிஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய விராட் கோலி 12 ரன்னில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மேக்ஸ்வெல் அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். பிரபு தேசாய் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நிதானமாக ஆடிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்சர்களாக விளாசி அரை சதம் கடந்தார்.
இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 189 ரன்களை எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 66 ரன்னும், ஷாபாஸ் அகமது 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதையடுத்து 190 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி அணி களமிறங்குகிறது.