சென்னை: திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நினைவேந்தலில் ராகேஷ் திருஉருவ படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ராகேஷ் சட்ட அறக்கட்டளையை கபில்சிபல் தொடங்கி வைத்தார்.