புத்தபெருமான் இலங்கைக்கு இரண்டாவது தடவையாக விஜயம் செய்த பக் முழு நோன்மதி தினம் இன்றாகும்.
உலகெங்கிலும் இந்துக்கள் இன்று சித்திரா பௌர்ணமியை அனுஷ்டிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பக் முழு நோன்மதி தினத்தை முன்னிட்டு ,இன்று (16) நாடுமுழுவதிலும் உள்ள பௌத்த விகாரைகளில் பல்வேறு வழி பாட்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இரண்டு நாக மன்னர்களுக்கு இடையில் ஏற்படவிருந்த மோசமான யுத்தத்தை நிறுத்துவதற்காக புத்தபெருமானாக பரிநிர்வாணம் அடைந்து, ஐந்தாவது வருடத்தில் இதேபோன்ற தினத்தில் அவர் நாகதீபத்திற்கு விஜயம் செய்தமையும் முக்கிய அம்சமாகும் என்று பௌத்த ,திகாசங்கள் கூறுகின்றன.
பௌத்த வரலாற்றில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்ற நோன்மதி தினமாகவும் இன்றைய நாள் கருதப்படுகின்றது.