பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டமன்றத்தில் இம்ரான் கான் கட்சி உறுப்பினர்கள் துணை சபாநாயகரைத் தாக்கியதால் அவர் பாதுகாவலர்களின் உதவியுடன் அவையை விட்டு வெளியேறினார்.
பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்தில் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. இம்ரான் கட்சி வேட்பாளராகப் பர்வேஸ் இலாகியும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஹம்சா சேபாசும் முதலமைச்சர் பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்தனர்.
இன்று கூட்டம் தொடங்கியதும் இம்ரான் கட்சி உறுப்பினர்கள் துணை சபாநாயகர் முகமது மசாரி மீது பொருட்களை வீசியெறிந்ததுடன் அவரைத் தாக்கியதால் அவை போர்க்களமானது. இதையடுத்துப் பாதுகாவலர்கள் உதவியுடன் துணை சபாநாயகர் அவையைவிட்டு வெளியேறினார்.