இலங்கையில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கிப் புறப்பட்ட N750GF விமானம், பிரித்தானிய கோடீஸ்வரரான ஜோர்ஜ் டேவிஸிற்க்குச் சொந்தமானது என செய்தி வெளியாகியுள்ளது.
பசில் ராஜபக்ஷ கொழும்பில் இருந்து டுபாய்க்கு இந்த விமானத்தில் சென்றதாக வதந்திகள் பரவியிருந்தன.
ஆனால் இந்த தனியார் விமானம் கடந்த மாதம் வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிக் கொண்டு இலங்கை வந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரை வெளியான தகவலுக்கமைய, மார்ச் மாதம் 28ஆம் திகதியன்று N750GF என்ற விமானம் டேவிஸ் உட்பட இரண்டு வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றி இலங்கை வந்தடைந்தது.
இந்த விமானம் இன்று காலை இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி சென்றுள்ளது.
டேவிஸ் ஒரு ஆங்கில ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பல முன்னணி ஆடை பிராண்டுகளின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.