பஸ்களில் அடிக்கடி தீப்பிடிப்பு ஆய்வு செய்கிறது பி.எம்.டி.சி.,| Dinamalar

பெங்களூரு : அவ்வப்போது பஸ்களில் திடீரென தீப்பிடிப்பதால், 186 பஸ்களை மீண்டும் ஆய்வு செய்ய பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, பி.எம்.டி.சி., எனப்படும் பெங்களூரு அரசு பஸ் போக்குவரத்து கழக துணைத்தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது:பெங்களூரில் சமீப நாட்களாக, பி.எம்.டி.சி., பஸ்கள் தீப்பிடிக்கின்றன. பயணியர் இருக்கும் போதே பஸ்களில் தீப்பிடித்ததால் இந்த விவகாரத்தை பி.எம்.டி.சி., தீவிரமாக கருதுகிறது.எரிந்த பஸ்களில் இரண்டு, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள். இதற்கு முன், இரண்டு முறை சம்பவம் நடந்த போது, அந்த நிறுவனத்தின் வல்லுனர்களை வரவழைத்து, பஸ்களில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை கண்டறியும்படி கூறப்பட்டது.

அதன்படி அவர்களும், பி.எம்.டி.சி., டிப்போவுக்கு வந்து, பஸ்களை ஆய்வு செய்து சென்றனர்.ஆய்வு நடத்தியதற்கு ஒரு மாதம் கழித்து, கடந்த 9ல் சேஷாத்ரி சாலையில் சென்ற மற்றொரு பஸ் தீப்பிடித்தது.பெங்களூரில் நிலவும் வெப்பத்தால், பஸ்களில் தீப்பிடித்திருக்கலாம் என கருதினோம். ஆனால் ஒரே நேரத்தில் வாங்கிய, அசோக் லேலண்ட் பஸ்களே தீப்பிடிப்பது தெரிந்தது. எனவே அந்த நிறுவனத்தின் 186 பஸ்களின் போக்குவரத்தை நிறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.