இந்தியாவின் அண்டை நாடான இலங்கை தற்போது திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள நிலையில், கடைசி வாய்ப்பாக ஐஎம்எப் அமைப்பிடம் கடன் வாங்குவதற்காகப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இலங்கையைக் காப்பாற்றுவது மிகவும் கடனமாகும்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் புதிய அதிபரான ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றிய சில நாளிலேயே 30 பில்லியன் டாலர் அளவிலான கடன் சுமைக்கு வழிவகுத்துள்ளார்.
டிவிட்டர்-ஐ எலான் மஸ் கைப்பற்ற ஈகோ-வும் ஒரு காரணமா..? சோகத்தில் ஸ்வீனி..!
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பி இயங்கும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்குக் கூடுதலான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் போன்ற பொருளாதார மற்றும் வர்த்தக மந்தநிலையில் இருக்கும் நாடுகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இருக்கும் வேளையில் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றியுள்ளார். இந்நிலையில் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டு அரசு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் புதிதாக 30 பில்லியன் டாலர் அளவிலான சுமையை அளிக்க முடிவு செய்துள்ளார்.
ஆட்சியைத் தக்க வைக்க
சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வில் குறிப்பிட்ட அளவில் தான் அரசு ஏற்க முடியும், கூடுதலான சுமை அனைத்தும் மக்கள் மீது தான் விதிக்கப்படும். இது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் பாகிஸ்தானில் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காகப் பெட்ரோ, டீசல் விலையை உயர்த்தாமல் வைத்திருந்த காரணத்தால் பாகிஸ்தான் நாட்டின் அரசு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஏற்கனவே 30 பில்லியன் டாலர் அளவிலான கடன் சுமையில் உள்ளது.
ஷெபாஸ் ஷெரீப் முடிவு
இந்நிலையில் புதிதாகப் பதவியேற்றியுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-யிடம் விலை உயர்வுக்கான பரிந்துரையை முன்வைக்கப்பட்ட நிலையில், விலை உயர்த்த மறுத்துள்ளார். இதனால் அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்குக் கூடுதலாக 30 பில்லியன் டாலர் சுமை உருவாகியுள்ளது, இதன் வாயிலாக 60 பில்லியன் டாலர் அளவிலான சுமையை எற்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
விலை உயர்வு பரிந்துரை
பாகிஸ்தானின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் (OGRA) டீசல் விலையை லிட்டருக்கு 51.32 ரூபாயும் (35.7 சதவீதம்), பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 21.30 ரூபாயும் (14.2 சதவீதம்), மண்ணெண்ணெய் லிட்டருக்கு 36.03 ரூபாயும் (28.7 சதவீதம்) உயர்த்த பரிந்துரைத்திருந்தது. இதேபோல் லைட் டீசல் எண்ணெய் (LDO) லிட்டருக்கு 38.89 ரூபாய் (39.9 சதவீதம்) என உயர்த்த பரிந்துரை செய்துள்ளது.
பாகிஸ்தான்
பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்குப் புதிய சுமையாக, மின் விநியோக நிறுவனங்களை நுகர்வோரிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிக்க ஷெரீப் அனுமதித்துள்ளார். இதன் வாயிலாக எரிபொருள் விலையைத் தற்போது உயர்த்துவதை மறுத்துள்ளதாகத் தெரிகிறது.
Pakistan may suffer under Rs 60-billion dues; PM Sharif decision
Pakistan may suffer under Rs 60-billion dues; PM Sharif decision பாகிஸ்தானைத் துரத்தும் 60 பில்லியன் டாலர் பிரச்சனை.. சமாளிப்பாரா ஷெபாஸ் ஷெரீப்..!