இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராக செயல்பட்டு வருபவர் குவாசிம் கான் சூரி. இவர் இம்ரான்கானின் ஆதரவாளர் என தகவல் வெளியானது.
எனவே, துணை சபாநாயகர் குவாசிம் மீது இன்று ஆளும்கட்சி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியை குவாசிம் கான் சூரி இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பாராளுமன்ற செயலாளர் ஏற்றுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்…பாகிஸ்தானில் டீசல் விலை ரூ.195 ஆக உயரும் அபாயம்