நடிகர் திலீப் மற்றும் அவரது உறவினர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்து டெலிட் செய்யப்பட்ட வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் லட்சக் கணக்கான போட்டோக்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நடிகர் திலீப்பின் மனைவியும், மலையாள நடிகையுமான காவ்யா மாதவன், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ உள்பட, பல வீடியோ ஆதாரங்கள் சிக்கிய நிலையில் தான் நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நடிகர் திலீப் மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அவரது உறவினர்கள் உள்ளிட்டவர்களின் செல்போன்களில் டெலிட் செய்யப்பட்ட டேட்டாக்களை போலீசார் மீட்டுள்ளனர்.
மொத்தம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 22 ஆயிரம் ஆடியோக்கள் மற்றும் 2 லட்சம் புகைப்படங்கள் என ஒரு பெரிய டேட்டாவே அழிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் அதனை நிபுணர்கள் உதவியுடன் மீட்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.