சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வகுப்புவாத மோதல்களை வன்மையாக கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான
மு.க.ஸ்டாலின்
, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான
மம்தா பானர்ஜி
, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
உணவு, உடை , நம்பிக்கை, பண்டிகை மொழியை பயன்படுத்தி ஒரு பிரிவினர் பிரச்னையை தூண்டுகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்பு வாத வன்முறையை கண்டிக்கிறோம். மத ரீதியாக பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து மக்கள் அமைதி காக்க வேண்டும்.
நாட்டில் வெறுப்பு பேச்சை தூண்டுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது. சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.