மாஸ்கோ: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவில் நுழைய ரஷ்ய அரசு தடை விதித்தது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது பிரிட்டன் பொருளாதார தடை விதித்த நிலையில் ரஷ்யா நடவடிக்கை எடுத்தது. உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை பிரிட்டன் வழங்கி வரும் நிலையில் போரிஸ் ஜான்சனுக்கு தடை விதிக்கப்பட்டது.