பீஸ்ட் படம் பதட்டத்தை தூண்டுகிறது : மாஜி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

குவைத் : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பதட்டத்தை தூண்டுகிறது, அமைதியை குலைப்பதாக இருக்கிறது என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வெளியாகி உள்ளது. முஸ்லீம்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரித்துள்ளதாக கண்டனம் எழுந்த நிலையில் இப்படத்திற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் குவைத்தில் தமிழக மக்களுக்கு மத்தியில் பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாசாரப் பேரவை சார்பில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் எம்எல்ஏ.,வும், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

latest tamil news


நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : புனித ரமலான் அமைதியை தருகிறது. தமிழகத்தில் திரைப்படங்கள் வழியே சிலர் வெறுப்பை விதைக்கிறார்கள். முஸ்லீம் சமூகத்தை கொச்சைப்படுத்த முனைகிறார்கள். ஏற்கனவே அர்ஜுன், விஜயகாந்த், கமல்ஹாஸன் போன்றவர்கள் இந்த தவறை செய்தார்கள். இப்போது பீஸ்ட் படம் விஜய் இந்த தவறை மூலம் செய்துள்ளார். ஏற்கனவே துப்பாக்கி படம் மூலம் அவர் இதுமாதிரியான பிரச்னைகளை சந்தித்தார்.

பீஸ்ட் படம் பதட்டத்தை தூண்டுவதாகவும், அமைதியை குலைப்பதாகவும் இருக்கிறது. திரும்ப திரும்ப ஒரு சமூகத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறார்கள். இது ஒரு கலை அல்லது சினிமா என ஒதுக்கிவிட முடியாது. காலம் முழுக்க மக்களுடன் தொடர்புள்ள ஒரு ஊடகம். எனவே இதில் தமிழக முதல்வர் தலையிட்டு பதட்டத்தை தணிக்க உதவ வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகளை தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்.

latest tamil news

முன்பு எம்ஜிஆர், சிவாஜி படங்களில் சகோதரத்துவம் ஓங்கும் வகையில் காட்சிகள் இருக்கும். ரஜினிகாந்த் படங்களிலும் அத்தகைய காட்சிகள் இருந்தன. இப்போது சில நடிகர்கள் பணத்திற்காகவும், பரபரப்பான விளம்பரத்திற்காகவும் இப்படி ஒரு சமூகத்தை கேவலப்படுத்த நினைக்கிறார்கள். எந்த மதத்தையும், சாதியையும், இனத்தையும் இழிவுப்படுத்தி படம் எடுக்காதீர்கள். உண்மைகளை வைத்து படம் எடுங்கள். வாழ்வியலை, வரலாற்றை படமாக்குங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.