நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே
பீஸ்ட்
படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததால் ரசிகர்கள் மத்தியில் ‘பீஸ்ட்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சன் பிக்சர்ஸ்
தயாரித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து
விஜய்
நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார்
நெல்சன் திலீப்குமார்
.இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை வெளியான ‘பீஸ்ட்’ படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் பலவிதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இந்தப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜய்காந்த் காலத்து அரதப்பழசான கதையை படமாக கொடுத்துள்ளதாக நெல்சனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள்.
தீயாய் வெளியான உதயநிதி படத்தின் மாஸ் அறிவிப்பு: என்ன செய்ய காத்திருக்காங்களோ.!
இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காண்பித்துள்ளது குறித்து மக்கள் பேசும் கருத்து தெரிவிக்கும் போது, எந்த மதங்களை சேர்ந்தவர்களையும் தப்பாக காட்டாமல் இருப்பது நல்லது. எந்த முஸ்லீம் இப்போ துப்பாக்கியை தூக்கிட்டு தீவிரவாதம் செய்றாங்க. விஜய் என்பதால் இதைப்பற்றி பேசுறோம். இதுவே ரஜினி படமா இருந்தா பேசி இருப்போமா? ஹீரோக்கள் ஸ்கிரிப்ட் செலக்ட் பண்ணும் போது இதெல்லாம் பார்க்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் முஸ்லீம், கிறிஸ்டியன், இந்துன்னு எதுவும் இல்லை. நம்ம எல்லாரும் மக்கள். அப்படி பாருங்க. உங்களோட முஸ்லீம் ரசிகர் இந்தப்படம் பார்க்கும் போது மனசு கஷ்டப்பட மாட்டாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர் மக்கள். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கராவாதம் தலை தூக்கியிருக்கக்கூடிய இந்த சமயத்தில், முஸ்லீம்கள் மீது வெறுப்பை விதைப்பதை போன்ற ஒரு படம் அவசியமா? என்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகினறனர்.