இயக்குனர்
மோகன்ஜி
இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மோகன் ஜி ‘திரௌபதி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். அதையடுத்து அவர் இயக்கத்தில் வெளியின
ருத்ர தாண்டவம்
படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது மோகன்ஜி அடுத்த படத்தின் பணிகளைத் துவங்கியுள்ளார். இந்தப் படத்தில் இயக்குனர்
செல்வராகவன்
முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்தக் கூட்டணியில் நடிகர்
நட்ராஜ்
இணைந்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பயில்வான் ரங்கநாதன் கேட்ட வில்லங்கமான கேள்வி: அஜித்தின் தரமான பதிலடி..!
ஏற்கனவே தனுஷின் ‘
கர்ணன்
’ படத்தில் நட்டி வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது வெளியாகியுள்ள
பீஸ்ட்
படத்தில் செல்வராகவன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இருவரும் இணைத்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று இந்தப் படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்திற்கு
பகாசூரன்
என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த திங்கள் முதல் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் இயக்குனர்.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!