ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் நாக்லா பத்மா பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் மேக்வால் கலந்து கொண்டார். அவர் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென இடியுடன் கூடிய பலத்த மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்விளக்கு கோபுரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி அஞ்சனி குமார் சிங் கூறுகையில், ‘இந்த விபத்தில் ராஜேஷ்குமார் என்ற நபர் இறந்துவிட்டார். சம்பவத்தின் போது அவர் மேடையில் இருந்தார். அவர் முன்னாள் அமைச்சர் டாக்டர் ஜிஎஸ் தர்மேஷின் டிரைவரின் சகோதரர். மேலும், முன்னாள் எம்எல்ஏ குடியாரி லால் துபேஷ் மற்றும் அவரது டிரைவர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக அமைச்சர் அர்ஜுன் மேக்வால் உள்ளிட்டோர் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்’ என்றார்.