கொழும்பு:
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்க பணம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் காணப்படுகிறது.
இதற்கிடையே, அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி தலைநகர் கொழும்புவில் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்பட உள்ளது என பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனால் ஏப்ரல் 18ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கொழும்பு பங்குச்சந்தை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க பொது மக்களுக்கு கட்டுப்பாடு