மதுரை: மதுரையில் வைகையாற்றில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 2 பேர் இறந்த நிலையில் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 9498042434 என்ற எண்ணில் விவரம் அறியலாம் என தெரிவிக்கப்பட்டது. நெரிசலில் சிக்கி உறவினர்கள் காணாமல் போயிருந்தால் உதவி என்னை தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
