உக்ரைனின் தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் இருந்து உக்ரைனிய ராணுவ வீரர்களை ரஷ்ய ராணுவம் நீக்கினால் அனைத்து அமைதி பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும் என அந்தநாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா 51 நாள்களை கடந்து ராணுவ தாக்குதலை நடத்திவரும் நிலையில், அந்தநாட்டின் முக்கிய நகரங்களின் மீது மீண்டும் தனது ஷெல் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், தலைநகர் கீவ்-வை சுற்றியுள்ள பிறப்பகுதிகளில் ரஷ்யா நடத்திவரும் ஷெல் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மரியுபோல் நகரம் 10 போரோடியங்காஸ்(Borodyankas) நகரை போல் காட்சியளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனின் முக்கிய தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் இருந்து உக்ரைனிய ராணுவ வீரர்கள் நீக்கப்பட்டால் ரஷ்யாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
அதேசமயம் உக்ரைன் தங்களின் குடிமக்களை வைத்தோ, அல்லது அதன் பிரேதசத்தை வைத்தோ வர்த்தகம் செய்யாது என தெரிவித்துள்ளார், இருப்பினும் போரோடியங்காஸ்(Borodyankas) போல பல பகுதிகளை பார்ப்பது என்பது மிகவும் கடினமானது என்றும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய கைதிக்கு மாற்றாக…ரஷ்ய சார்பாளர் மனைவியின் ஒப்பந்தம்: போரிஸ் செய்வாரா?
போரோடியங்காஸ்(Borodyankas) ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் உருகுலைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
மரியுபோலில் இன்னமும் உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருவதாகவும், தற்போது அவர்கள் நகரின் அசோவ்ஸ்டல் உலோக துறைமுகத்திற்கு அருகில் பின்தள்ளப்பட்டு தங்களது நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.