Realme இன் டெக்லைஃப் பிராண்டான Dizo, தனது புதிய ஸ்மார்ட்வாட்சை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனம்
Dizo Watch S
எனும் ஸ்மார்ட்வாட்சை ஏப்ரல் 19 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு உள்நாட்டில் அறிமுகம் செய்கிறது.
இது ஒரு செவ்வக வடிவ கடிகாரமாக இருக்கும். இந்தியாவின் பிரபலமான பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இந்த வாட்ச் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்சானது பெரிய மற்றும் பிரகாசமான வளைந்த திரை அமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்லிம் உடலமைப்புடன் இந்த வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாட்சின் விலை மற்றும் சிறப்பம்சங்களைக் காணலாம்.
5 நிமிட சார்ஜ் போதும்; புதிய BoAt இயர்பட்ஸில் 1 மணிநேரம் அரபிக் குத்து கேட்கலாம்!
Dizo Watch S சிறப்பம்சங்கள்
டிசோ
வாட்ச் எஸ் ஸ்மார்ட்வாட்சானது, 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இதில் 1.57″ இன்ச் வளைந்த டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.
Dizo
Watch S ஆனது செவ்வக வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட் வாட்சின் உடல் மிகவும் மெலிதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, கையில் கட்டும்போது, சிறப்பாக உணர்வீர்கள்.
முக்கியமானதாக பார்க்கப்படும் இதய துடிப்பை அறியும் சென்சார் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரத்த ஆக்சிஜன் அளவை கண்டறியும் சென்சாரும் இதில் உள்ளது. 3-ஆக்சிஸ் ஆக்செலெரோமீட்டர், ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன்அளவு, ஜியோமேக்னெட்டிக் சென்சார், கைரோஸ்கோப் சென்சார் ஆகிய சென்சார்கள் கண்காணிப்புக்காக பொருத்தப்பட்டுள்ளது.
ப்ளூடூத் 5.1 (10 மீட்டர் வரை), 110+ ஸ்போர்ஸ் மோட் ஆதரவை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது. இதில் சக்திவாய்ந்த பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வாட்ச் முகங்களை நம்மால் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இதற்காக 100க்கும் மேற்பட்ட Watch Face-கள் இதில் நிறுவப்பட்டுள்ளது.
கூகுள் மேப்ஸ் அப்டேட்: இனி உங்கள் பயணம் சுகமாகும்!
டிசோ வாட்ச் எஸ் விலை
இந்த வாட்ச் Flipkart மற்றும் நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கிறது. கிளாசிக் பிளாக், கோல்டன் பிங்க் மற்றும் சில்வர் ப்ளூ ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட் கடிகாரம் வெளியிடப்படுகிறது. Dizo Watch R இந்திய சந்தையில் ரூ.3,999 என்ற விலையில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.
அறிமுக சலுகையாக சிறப்பு தள்ளுபடி இந்த வாட்சிற்கு வழங்கப்படுகிறது. எனவே, இந்த வாட்ச் டெக் சந்தையில் ரூ.3000 என்ற சலுகை விலைக்கு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த வாட்சுகள் பட்டியலில் இதுவும் இடம்பிடிக்கும்.
வரவிருக்கும் DIZO Watch S பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன? கீழே உள்ள கருத்துகள் பிரிவில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.